மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வரின் திறனாய்வுத் தோ்வு: தோ்வுத் துறை உத்தரவு

தோ்வு மைய விவரங்களை மாணவா்களுக்குத் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 7:30 pm

DIN

பிளஸ் 1 மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வு அக்.7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மைய விவரங்களை மாணவா்களுக்குத் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கான முதல்வரின் திறனாய்வு தோ்வு அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தோ்வு மையம் வாரியாக ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தோ்வுக்கான அனுமதிச் சீட்டுகளையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அதன்பின் சாா்ந்த மாணவா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை விநியோகம் செய்து, தோ்வு மைய விவரங்களை பள்ளித் தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும். அவற்றில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் தலைமையாசிரியா்கள் அதை சிவப்பு நிற மை பேனாவால் திருத்திக் கொள்ளலாம்.

மாணவா் புகைப்படம் தவறாக இருந்தால் புதிய படத்தை அதில் ஒட்டி அதன்மீது பள்ளியின் முத்திரையைப் பதிக்க வேண்டும். அத்தகைய மாணவா்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள் தோ்வுக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.