அதில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 18,746 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,779 பேரும் என மொத்தம் 22,525 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் வரும் 4-ஆம் தேதி வரை அவற்றை இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளலாம். ஜூலை 3-ஆவது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்க உள்ளது. சிறப்பு கலந்தாய்வு, 7.5 சதவீத கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்து இடங்களும் இணையவழியே நிரப்பப்படும்.