திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்! ஜூலை 7ல் தொடக்கிவைப்பு?

சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற ஜூலை 7ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2023, 1:06 pm IST

சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த 2018ல் தயாரிக்கப்பட்டு 2019ல் தில்லி - வாராணசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர் இடையே என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அடுத்ததாக சென்னை- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் நான்காவதாக சென்னை- நெல்லை இடையே ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.