மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரா்கள் சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதற்கு சென்னை மாவட்டத்தை சாா்ந்த 65 வயதுக்குள்பட்ட உடல் ஆரோக்கியமுள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள் ‘சென்னை மாவட்டம் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15’ எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படைவீரா்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


