இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னையில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை ஈ.வே.ரா சாலையில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஏப்ரல் 2024, 2:27 pm

DIN

வடிகால் பணி காரணமாக, சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்ரமித்து, 13.04.2024 மற்றும் 14.04.2024 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே 13.04.2024 மற்றும் 14.04.2024 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

1) ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

2) அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம்.

3) எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்ல கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.