காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து இடங்களில் பசுமை வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் நாளை (ஏப். 18) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கென மொத்தம் 1932 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

கடந்த தேர்தலின் போதும் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையிலும், பெண்கள் வாக்குப்பதிவு செய்யும் ஓட்டு சாவடிகளில் பிங்க் பூத் என அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

அதேபோல் தற்போது பசுமை இயற்கை சூழலை பேணி காக்கும் வகையில் பசுமை வாக்குப்பதிவு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த வாக்குப்பதிவு மைய நுழைவு வாயிலில் வாழைமரை தோரணம், தென்னை, நுங்கு உள்ளிட்ட காய்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு செலுத்த வரும் மக்கள் அமர முற்றிலும் நிழல் தரும் வகையில் பச்சை தென்னை ஓலையில் வேயப்பட்ட கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வாக்கு சாவடி நுழைவு வாயிலில் காய்கறிகள், பழங்கள் தோரணங்களாகவும், வாக்குச் சாவடி அலுவலர்கள் மேஜை முழுவதும் பச்சை தென்னை ஓலையை வேயப்பட்டு அனைத்து பகுதிகளும் பசுமையாக காணும் வகையில் மாவிலை தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் சிறுகாவேரிப்பாக்கம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஓரிக்கை பகுதியிலும் , குன்றத்தூர் மற்றும் ஐயப்பன் தாங்கல் பகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு மையங்கள் என ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com