மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்தது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(29.04.24) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.240 குறைந்து ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,740 ஆகவும் உள்ளது.
பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று வெள்ளி விலை கடந்த மூன்று நாள்களாக அதே விலையில் நீடிக்கின்றது. ஒரு கிராம் ரூ.87.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.87.500-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...