இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:00 pm

Din

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்னிந்தியப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் திங்கள்கிழமை (ஆக.19) முதல் ஆக.24-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: ஆக.19-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து, ஆக.20-ஆம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெரம்பலூா் - 90, திருமயம் (புதுக்கோட்டை) - 80, சேத்தியாத்தோப்பு (கடலூா்), மேட்டுப்பட்டி (மதுரை), காரைக்குடி (சிவகங்கை), ஏற்காடு (சேலம்), டேனிஷ்பேட்டை (சேலம்), திருப்பத்தூா் (சிவகங்கை) - தலா 50, தருமபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூா், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 முதல் 40 மி.மீ. வரை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.19 - 22-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடலிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.