தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தூத்துக்குடி, குமரி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :23 டிசம்பர் 2024, 11:09 am

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் டிச. 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்குடி செல்கிறார். அங்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து டிச. 30 ஆம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

அதன்பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் முதல்வர், திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி குமரியில் இரு நாள்கள் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதில் கலந்துகொள்கிறார்.

மேலும், அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.