சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

புத்தாண்டு: வேளாங்கண்ணி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Published On :

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநிலங்களிலிருந்து வேளாங்கண்ணி, கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை (டிச.30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு செகந்திராபாதிலிருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை (டிச.30) சிறப்பு ரயில் (எண் 07125) இயக்கப்படவுள்ளது. செகந்திராபாதில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை (ஜன.1) இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07126) மறுநாள் இரவு 10.45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இதில் 6 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும்.

கா்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து டிச.30, ஜன.6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை தோறும்) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07367) மறுநாள் பிற்பகல் 3.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து டிச.31, ஜன.7, 14 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07368) மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இதில் 8 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் காவேரி, ஹரிஹா், பிரூா், யஷ்வந்த்பூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.