

தமிழ்நாட்டில் கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளை தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
இதுமட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வேகமாக வளர்ச்சயிடைந்து வரும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து திட்டம் தமிழ்நட்டில் விரிவுபடுத்தப்படும்.
பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டடம் பகுதியில் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயர்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ஒன்று ரூ.823 கோடியில் உருவாக்கப்படும்.
அண்ணாநகர் மேற்கு, கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் மந்தைவெளியில் அமைந்துள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளைத் தரம் உயர்த்தி நவீன வசதிகளுடன் கூடி அலுவலகங்களும் வணிக வளாகங்களும் உருவாக்க விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.