நடப்பாண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி!

ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி!

2024 - 2025ம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார்.

அதில், கரும்பு, பூக்கள், பழங்கள், வேளாண் இயந்திரங்கள், விதைகள், வேளாண் பயிற்சி உள்ளிட்ட பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பண்ணைக்குட்டைகள், கசிவுநீர் குட்டை, புதிய குளங்கள் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு.

நடப்பாண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி!
பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு 1,775 கோடி ஒதுக்கீடு!

பனை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் பனை விதைகள் நடப்படும்.

இலவச மின் இணைப்புக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக மின்வாரியத்துக்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வறட்சி தணிப்பிற்கான சிறப்புத் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி ஒதுக்கீடு.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.

நடப்பாண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி!
மருதம் பூங்கா, சூரியத் தோட்டம், மூலிகை சாகுபடி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

இவ்வாறு 2024 - 2025ம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com