பாஜகவில் இணைந்த விஜயதரணி மீது, கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து அவரது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.விஜயதரணி, புது தில்லி சென்று பாஜகவில் இணைந்துள்ளாா். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அல்லது மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாங்கள் சாா்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சியில் சோ்ந்தால் அவா்களின் பதவி பறிக்கப்பட்டுவிடும் என்ற விதியின் அடிப்படையில், விஜயதரணியினுடைய சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு, பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

விளவங்கோடு தொகுதியில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன்: பாஜக வேட்பாளா் விஜயதரணி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


