நாகை மாவட்டத்தில் 85% பேருந்துகள் இயக்கம்!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாகையில் 85% பேருந்துகள் இயக்கப்படுவதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 
நாகை மாவட்டத்தில் 85% பேருந்துகள் இயக்கப்படுவதால் வெறிச்சோடி காணப்படும் அரசு போக்குவரத்து கழக பணிமனை
நாகை மாவட்டத்தில் 85% பேருந்துகள் இயக்கப்படுவதால் வெறிச்சோடி காணப்படும் அரசு போக்குவரத்து கழக பணிமனை
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம்: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 85% பேருந்துகள் இயக்கப்படுவதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் காலை 10.30 மணி நிலவரப்படி 85% பேருந்துகளும், கிராமப்புறங்களுக்கு 100% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

நாகை பணிமனையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு 52 பேருந்துகளில், 32 பேருந்துகளும். நாகையில் இருந்து திருச்சி, பழனி, திருப்பூர் மாவட்டங்களுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுவதால், வெளியூர்களுக்கு பயணிகள்  பயணம் சிரமமின்றி பயணிக்கின்றனர்.

பேருந்துகள் பெரும்பான்மையாக இயக்கப்பட்டாலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக நாகை பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. 

85% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறினாலும், பேருந்து கிடைக்கவில்லை! 1 மணி நேரமாக காத்திருக்கிறோம், கல்லூரிக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, என பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். தரங்கம்பாடி கல்லூரிக்கு வழக்கமாக செல்லும் நகர பேருந்து சரியான நேரத்திற்கு வந்துள்ளது. 

இதனிடையே பிற்பகல் 12 மணிக்குள் நாகை மாவட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாகை பணிமனை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com