இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொங்கல் வைப்பவர்களின் கவனத்துக்கு!

பொங்கல் குழைவாகவும், மனமாகவும் இருக்க பொங்கல் வைக்கும்முன் தாய்மார்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்கலாம். 

News image
பொங்கல் வைப்பவர்களின் கவனத்துக்கு!
Updated On :13 ஜனவரி 2024, 10:49 am

DIN

பொங்கல் குழைவாகவும், மனமாகவும் இருக்க பொங்கல் வைக்கும்முன் தாய்மார்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்கலாம். 

• அரிசியை மிக்ஸியில் நொய்யாக உடைத்து பொங்கல் செய்தால், குழைவாக சீக்கிரம் செய்யலாம். ஆனால், பயத்தம் பருப்பை முன்னதாக வேக வைக்க மறக்க வேண்டாம்.

• பொங்கலுக்கு இனிப்புச் சுவை மட்டும் போதாது. முந்திரி, பாதம், அக்ரோட், சாரைப் பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து பரிமாறும்போது மேலே தூவி அலங்கரித்தால் அருமையான சுவை.

• சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அவலை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் குழைவாகவும் கூடுதலாகவும் இருக்கும்.

• சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, கடைசியாக நூறு கிராம் உதிர்ந்த கோவாவைப் போட்டு நன்றாகக் கலந்துவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.

• கொப்பரைத் தேங்காயைத் துருவி திராட்சை, முந்திரிப் பருப்பை அரைத்து சர்க்கரைப் பொங்கலில் கலந்தால் சுவையும் மணமும் கூடும்.  இதோடு, பசும்பால் சேர்த்தால் மணம் மேலும் அதிகரிக்கும்.

• பொங்கலைக் கிளறும்போது,  சிறிது சிறிதாக நெய் ஊற்ற வேண்டும். அரிசியுடன் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் மணம் கூடும்.

• சர்க்கரைப் பொங்கலில் தேங்காயைப் பல்லு பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போட்டால் சுவை இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.