கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு விரைவுப் பேருந்துகளில் கட்டண உயர்வா? போக்குவரத்து துறை விளக்கம்

அரசு விரைவுப் பேருந்துகளில் சப்தமில்லாமல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருப்பதாக வரும் தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News image

கிளாம்பாக்கம்

Updated On :19 ஜனவரி 2024, 10:29 am

DIN


சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில் சப்தமில்லாமல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இந்த முறை பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. இதன் காரணமாக அதற்கு ஏற்றவாறு பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதற்குப் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் குறைந்த கட்டணம் வசூலித்து வந்தது. தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. 

எனவே வழக்கமான கட்டணமே தற்போது வசூல் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.