புதுச்சேரியில் ஜன.22ஆம் தேதி பொதுவிடுமுறை
அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவான ஜனவரி 22ஆம் தேதி புதுச்சேரிக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழாவான ஜனவரி 22ஆம் தேதி புதுச்சேரிக்கு பொதுவிடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக, பொதுவிடுமறை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். ஏற்கனவே குஜராத் அரசும், அன்றைய தினத்தில் பொதுவிடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. அயோத்தி ராமர் கோயிலில் மோடியின் பங்களிப்பு ஸீரோ: சுப்ரமணியன் சுவாமி
அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாதினமான திங்கள்கிழமையன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை அறிவித்து மத்திய பணியாளா் நல அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் பொதுத் துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அரைநாள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான குழந்தை ராமா் சிலை வரும் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் ‘பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட உள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. இனி, ஆன்டிபயாடிக் கொடுப்பது ஏன் என மருத்துவர் விளக்க வேண்டும்
இந்நிலையில், ‘பிரதிஷ்டை நாளான திங்கள்கிழமையன்று கொண்டாட்டங்களில் மத்திய அரசுப் பணியாளா்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுகிறது’ என மத்திய பணியாளா் நல அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...