சேலம்: திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் கட்சிக் கொடியேற்றத்துடன் சேலத்தில் இன்று தொடங்கியது.
திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலை காலை 9 மணி அளவில் வந்தடைந்தார். அவரை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திறந்த வாகனத்தில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி மாநாட்டு திடலை வந்தடைந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர்.

மாநாட்டு திடலின் முகப்பில் கொடிக்கம்பம் அருகே ஆயிரக்கணக்கில் திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் நான்கு பேரின் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் முன்னிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டு திடலை எம்.எல்.ஏ. எழிலரசன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்க: அயோத்தி: பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள்!
இளைஞரணி முழக்க பாடலுன் மாநாடு தொடங்கியது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆர்.ராஜேந்திரன் (சேலம் மத்திய), டி.எம்.செல்வகணபதி (சேலம் மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு
பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



