இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஏரிக்கரையை உடைத்து சென்னை - பெங்களூரு சாலைப் பணி! விவசாயிகள் அதிர்ச்சி!!

பெங்களூர் அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை உடைத்து பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 7:34 am

DIN

பெங்களூர் அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை உடைத்து பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை - பெங்களூர் அதிவிரைவு சாலை போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பிரதான கிராமப்புறத்தை கடக்கும் பாதைகளில் உயர்மட்ட பாலம் மற்றும் ஏரி நடுவே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

இரண்டாவது கட்டமாக சாலை அமைக்கும் பணிக்கு ஆளுயரத்திற்கு மண்ணைக் கொட்டி நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்

இதில் காஞ்சிபுரம் - அரக்கோணம் மின்சார ரயில் கடக்கும் பாதை மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் நான்கு வழி சாலை கடக்கும் பாதைக்கு உயர்மட்ட பாலப் பணி நடந்து வருகிறது

இந்தப் பணிக்கு கோவிந்த வாடி ஏரிக்கரை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எனவே சேதப்படுத்தி இருக்கும் ஏரிக்கரையை முறையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு யார் கரையை உடைத்தார்கள் என்பதை விசாரிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.