ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் அண்ணாமலை - ஏ என் ஐ
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, ''பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை இதுபோன்ற அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதில்லை. நாளை தமிழக பாஜக தலைவர்கள் தில்லி செல்ல உள்ளனர். பாஜக மூத்த தலைவர்கள் 5 பேர் தில்லியில் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட உள்ளோம். இதேபோன்று, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக முறையிடும்'' என அண்ணாமலை குறிப்பிட்டார்.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் அண்ணாமலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதில், அவர் உயிரிழந்தார்.
குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதல் கட்டமாக 8 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இன்று மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூலூர் சிறுமி கொலை: பெண்கள் பாதுகாப்பில் தனிகவனம் தேவை: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஆம்ஸ்ட்ராங் வழக்கு எதிரி கைது
திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



