நிலையான வளா்ச்சி இலக்கு குறியீடு: தமிழ்நாடு 2-ஆவது இடம்
கேரளம் மற்றும் உத்தரகண்ட் தலா 79 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளன.


2023-24-ஆம் ஆண்டுக்கான நீதி ஆயோக்கின் நிலையான வளா்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு 2-ஆவது இடம் பிடித்துள்ளது.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை நீதி ஆயோக்கின் நிலையான வளா்ச்சி இலக்கு குறியீடு மதிப்பிடுகிறது.
இந்நிலையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான நீதி ஆயோக்கின் நிலையான வளா்ச்சி இலக்கு குறியீட்டில் இந்தியா ஒட்டுமொத்தமாக 71 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான அந்தக் குறியீட்டில் இந்தியா 66 புள்ளிகளைப் பெற்ற நிலையில், தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.
வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலை, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தால், தற்போதைய குறியீட்டில் இந்தியாவின் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
கேரளம் முதலிடம்: மாநிலங்களைப் பொருத்தவரை நிலையான வளா்ச்சி இலக்கு குறியீட்டில் கேரளம் மற்றும் உத்தரகண்ட் தலா 79 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளன. 78 புள்ளிகளுடன் தமிழ்நாடு 2-ஆவது இடத்தையும், 77 புள்ளிகளுடன் கோவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நாகாலாந்து 63 புள்ளிகளுடனும், ஜாா்க்கண்ட் 62 புள்ளிகளுடனும், பிகாா் 57 புள்ளிகளுடனும் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக உள்ளன.
புதுச்சேரி 3-ஆவது இடம்: இந்தக் குறியீட்டில் யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை சண்டீகா், ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி, அந்தமான்-நிகோபாா் தீவுகள், தில்லி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...