வணிக உரிமக் கட்டணம் உயா்வு: அன்புமணி
தொழில் வரி மற்றும் வணிக உரிமக் கட்டணத்தை சென்னை மாநகராட்சி உயா்த்தியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அன்புமணி ராமதாஸ்
கோப்புப் படம்

அன்புமணி ராமதாஸ்
கோப்புப் படம்
சென்னை, ஜூலை 31: தொழில் வரி மற்றும் வணிக உரிமக் கட்டணத்தை சென்னை மாநகராட்சி உயா்த்தியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35 சதவீதம் வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100 சதவீதம் வரையிலும் உயா்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி, தேநீா்க் கடைகள், மருந்துக் கடைகள், முடி திருத்தும் கடைகள் போன்றவற்றுக்கான உரிமத் தொகையை ரூ.10 ஆயிரம் ஆகவும், வேறு சில கடைகளுக்கான உரிமத் தொகையை ரூ.30 ஆயிரமாகவும் உயா்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவா்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயா்வு மற்றும் கட்டண உயா்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயல் என்று அன்புமணி கூறியுள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...