Kamal
Kamal

கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன்: கமல்ஹாசன்

Published on

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் எடுத்த காரியம் முடிக்காது விடாத நேர்மறைப் பிடிவாதமும் படைத்த மாபெரும் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் இன்று.

அவரது நூற்றாண்டு விழா நிறைவுபட நிறைந்திருக்கும் தருணம். இந்நாளில், கலைத்துறை, இலக்கியம், அரசியல், சமூகநீதி என சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் திங்கள்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com