ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

2026இல் அதிமுக ஆட்சியமைக்கும்: சசிகலா

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்த சசிகலா..

News image
Updated On :16 ஜூன் 2024, 11:27 am

DIN

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் சசிகலா பேசியதாவது:

”அஇஅதிமுக ஏழை மக்களுக்கான இயக்கம். புரட்சித் தலைவர், அம்மா, நான் உள்பட நாங்கள் அனைவரும் பல துன்பங்களை அனுபவித்து இந்த இயக்கத்தை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக கொண்டு வந்தோம். ஆனால் இன்று இந்த இயக்கம் தொடர் சரிவுகளையே சந்தித்து வருகிறது.

ஒரு சில சுயநலவாதிகள் இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.இவையனைத்தையும் நான் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்ததேன்.

புரட்சித் தலைவர் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தவர். அவர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று திரும்பிய பின், என்னை சந்திக்கும் போதெல்லாம் என்னுடன் நல்ல முறையில் பேசியுள்ளார். என்னுடன் அரசியல், இயக்க சம்பந்தப்பட்ட பல செய்திகளையெல்லாம் பேசுவார்.

அப்போது அவரிடம் நான் கண்ட பண்பு, யாரையும் தூக்கி எறியக்கூடாது, எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுப்பார். தை பின்பற்றி நானும், அம்மாவும் அப்படியே பழகிவிட்டோம்.

இந்த சாதி தான் சொந்த சாதி என்ற எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது. புரட்சித் தலைவர் எப்படி இருந்தாரோ, அதே போலவே தான் நானும் அம்மாவும் இருந்தோம். அம்மாவும் சாதி பார்ப்பவர் கிடையாது. அப்படி சாதி பார்த்து பழகியிருந்தால், உயர்சாதி வகுப்பை சார்ந்த அவர், என்னுடன் பழகியிருக்க மாட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கி ஆடும். ஆனால், இங்கு சாதாரண ஏழை கூட எம்.பி. எம்.எல்.ஏ. ஆகலாம். ஆனால் இப்போது நம் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு முன்னுரிமை கொடுத்து சாதி அரசியல் செய்கிறார்கள். இதை நானும், தொண்டர்களும், யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

நான் பெங்களூரு சென்றபோது, சாதி பார்த்திருந்தால், அவருக்கு வாய்ப்பளித்திருக்க மாட்டேன். இன்றைய நிலைமை, அதிமுக 3வது, 4வது இடத்துக்கு போய்விட்டது, டெபாசிட்டும் போய்விட்டது. சிலர் தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது.

Story image

பொதுமக்களுக்கு அதிமுக என்றால் பிரியம் அதிகம். நல்ல நேரம் இப்போது வந்துவிட்டது. காலம் கணிந்துள்ளது. இதையே எப்போதும் சொல்கிறேன் என எண்ண வேண்டாம். இதுதான் சரியான நேரம். நிச்சயமாக தமிழக மக்கள் நம் பக்கம் தான்.

பல கூட்டணிகளை வைத்துக்கொண்டு நின்று, அவர் பேசலாம். ஆனால், நான் உறுதியாக உள்ளேன். அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க முடியாது. என்னுடைய எண்ட்ரி இப்போது ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எனக்காக இருக்கிறார்கள்.

2026இல் அம்மாவுடைய ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். தனிப்பெருங்கட்சியாக இருப்போம்.

நான் அதிகமாக பேச மட்டேன். முக்கியமான நேரத்தில் மட்டுமே குரல் கொடுப்பேன். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

திமுகவின் சலசலப்புகள் எப்படி ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை கொடுக்க வேண்டும். திமுகவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காக்க வேண்டும்.

நான் அவசரப்படவில்லை. எனக்கு ஒரு கண் தொண்டர்கள், இன்னொரு கண் மக்கள். என்னுடைய பார்வை, நேர்கொண்ட பார்வை. இந்த செய்திக்காக தான் காத்திருந்தீர்கள். 40 வருடங்கள் மக்கள் பணி, இனி வரும் காலமும், மக்களுக்காக தான் வாழ்வேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.