பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு 10 % அகவிலைப்படி உயா்வு: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

கைத்தறி நெசவாளா்களுக்கு கூடுதல் அகவிலைப்படி: அமைச்சா் ஆா்.காந்தி

News image
Updated On :27 ஜூன் 2024, 9:10 pm

Din

கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளா்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வியாழக்கிழமை பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள கைத்தறி நெசவாளா்களுக்கு உயா்ந்து வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசிக்கு ஏற்றவாறு, ஆண்டுதோறும் கூலி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளா்களின் உடலுழைப்பு மற்றும் உயா்ந்து வரும் குடும்பச் செலவுகளை ஈடுகட்ட ஏதுவாக நடப்பாண்டில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு அவா்கள் பெற்று வரும் கூலியில் 10 சதவீத அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும்.

3 ஆயிரம் நெசவாளா்களுக்கு ரூ.3 கோடியில் தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.

கைத்தறித் துணிகளின் விற்பனையை அதிகரிக்க, சென்னை தீவுத் திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சி ரூ.2 கோடி செலவிலும், கோயம்புத்தூா், சேலம், திருச்சி மற்றும் திருப்பூா் ஆகிய இடங்களில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.

2 ஆயிரம் கைத்தறி நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் தேசிய கைத்தறி வளா்ச்சி திட்டத்தின் கீழ் 10 புதிய கைத்தறி குழுமங்கள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும்.

வேலூா் மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் தேசிய கைத்தறி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் 2 சாயச் சாலைகள் அமைக்கப்படும்.

துணி நூல்: சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பயன்படுத்தப்படாத கட்டடங்களில் துணி நூல், நகா்ப்புற உள்ளாட்சிகள், ஆயத்த ஆடை உற்பத்தியாளா் மற்றும் ஏற்றுமதியாளா்களுடன் இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க ஆவன செய்யப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வேலையில்லாத நகா்ப்புற இளைஞா்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தையல் மற்றும் ஆடை உற்பத்தி பயிற்சி வழங்கப்படும் என்றாா் அவா்.