சட்டப்பேரவையில் எந்தச் சமுதாயத்தைப் பற்றியும் தவறாகப் பேசவில்லை என்று அமைச்சா் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு இடையில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் கூறியது:
சட்டப்பேரவையில் ரெட்டியாா் சமுதாயம் குறித்து நான் பேசியதாகத் தவறாக எடுத்துக் கொண்டாா்கள். எந்தச் சமுதாயத்தைப் பற்றியும் நான் தவறாகப் பேசவில்லை. ஜாதி, மதம் இல்லை என்றுதான் பேசினேன். இதுதான் திராவிடக் கொள்கையும். நாம் அனைவரும் ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் புண்படுத்துவதற்காக அப்படிப் பேசவில்லை என்றாா் அவா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசியவற்றில் சில விவகாரங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் பேரவையில் அவா் விளக்கம் அளித்துள்ளாா்.
டிரெண்டிங்

பேரவையில் 66,974 கேள்விகளை எழுப்பிய ஜி.கே.மணி

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.7,379 கோடி ஒதுக்கீடு : பேரவையில் அமைச்சா் சிவசங்கா் தகவல்

புதுக்கோட்டை, தஞ்சாவூா், கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு ரூ.100 கோடி மானியம் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

‘அம்மா உணவகம்’ மூடலா? பேரவையில் காரசார விவாதம்
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

