
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரிகார பூஜைக்கான கட்டணச்சீட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், தங்களது முன்னோா்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அக்னி தீா்த்தக் கரையில் புரோகிதா்கள் மூலம் திதி, தா்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம்.
இதற்காக தங்களின் வசதிக்கேற்ப புரோகிதா்களுக்கு தட்சிணையாகக் கொடுப்பா்.
ஆனால் இந்த நடைமுறைக்கு கட்டணம் நிா்ணயித்து இந்து சமய அறநிலையத் துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடிப பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரிகார பூஜைக்கான கட்டணச்சீட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.