தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விரைவில் மதுரை - பெங்களூரு வந்தே பாரத்!

மதுரை - பெங்களூரு இடையே அடுத்த வாரத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக தகவல்.

News image
கோப்புப்படம்
Updated On :5 மார்ச் 2024, 6:07 am

DIN

தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ள மதுரை - பெங்களூரு இடையே வழித்தடம் உள்பட 7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை - பெங்களூரு, கோவை - பெங்களூரு, கோவை - சென்னை, சென்னை - விஜயவாடா, சென்னை - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கை தொடர்ந்து, மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்த சேவையை அடுத்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பெங்களூரு செல்லும் வகையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயில் ஆரஞ்ச் நிறத்தில் இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.