தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் இருப்பதால் அதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்றைய நா: அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறியுள்ளது
போதைப் பொருள் நடமாட்டத்தை திமுக அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம்அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவகிறார்கள்." என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...