மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார் ஆர்.என். ரவி: அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2024, 5:42 am

DIN

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ஓட்டேரியில் அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், துணைவேந்தர்கள் பதவிகால விவகாரத்தில் வரம்பு மீறி செல்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்தி வரும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் முடிவு கட்டப்படும்.

தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவியேற்பு விழா நடத்தப்படும்.

மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.