தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

இன்று தங்கம் வாங்கலாமா? தங்கம் விலை நிலவரம்

இன்று தங்கம் வாங்கலாமா? தங்கம் விலை நிலவரம் சொல்வது என்ன?

சென்னை: தங்கம் விலை கடந்த வாரங்களில் ஏறுமுகமாக இருந்துவந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.48,720-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

திங்கள்கிழமை காலை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.25 குறைந்து ரூ.6,090க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வரும் நிலையில், கடந்த 9-ஆம் தேதி புதிய உச்சமாக ரூ.49,200-ஐ தொட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஒரு கிராம் ரூ.6,150-க்கு விற்பனையானது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தங்கம் இனி குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நகைக்கடை உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தது மேலும் கலக்கத்தையே ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.200 குறைந்துள்ளது. இதனால், தங்கம் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு இன்று தங்கம் வாங்க நல்ல நாளாக மாறியிருக்கிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.80.00-க்கும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ. 80,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com