சீரியலில் கூட இல்லாத காட்சி! எதிர்நீச்சல் ஜனனி - சக்தி வெளியிட்ட காதல் விடியோ!

ஜனனி பாத்திரத்தில் நடிகை மதுமிதாவும், சக்தியாக நடிகர் சபரி பிரசாந்த்தும் நடிக்கின்றனர்.
சீரியலில் கூட இல்லாத காட்சி! எதிர்நீச்சல் ஜனனி - சக்தி வெளியிட்ட காதல் விடியோ!
Published on
Updated on
2 min read

எதிர்நீச்சல் தொடரின் முதன்மை பாத்திரங்களான ஜனனி தனது கணவர் சக்தியுடன் வெளியிட்டுள்ள விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஜனனி பாத்திரத்தில் நடிகை மதுமிதாவும், சக்தி பாத்திரத்தில் நடிகர் சபரி பிரசாந்த்தும் நடித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பல முற்போக்கு கருத்துகளை முன்வைக்கும் காட்சிகள் இந்தத் தொடரில், கதாபாத்திரங்கள் மூலமாகவே வைக்கப்படுகிறது. இதனால் விமர்சன ரீதியாக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சீரியலில் கூட இல்லாத காட்சி! எதிர்நீச்சல் ஜனனி - சக்தி வெளியிட்ட காதல் விடியோ!
நடிகை மதுமிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எதிர்நீச்சல் குழு!
நடிகை மதுமிதா - சபரி பிரசாந்த்
நடிகை மதுமிதா - சபரி பிரசாந்த்

எதிர்நீச்சல் தொடரின் நாயகி நடிகை மதுமிதாவுக்கும் அவரின் கணவராக நடிக்கும் சபரிக்கும் இடையிலான காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூகவலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் நடிகை மதுமிதா. படப்பிடிப்புக்கு மத்தியில் நடிகை மதுமிதா, சக நடிகர் - நடிகைகளுடன் விடியோ பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் நடிகர் சபரியுடன் அவர் பதிவிடும் விடியோக்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடுகிறது.

சீரியலில் கூட இல்லாத காட்சி! எதிர்நீச்சல் ஜனனி - சக்தி வெளியிட்ட காதல் விடியோ!
இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

இதனிடையே நடிகை மதுமிதாவும் சபரியும் சேர்ந்து தற்போது புதிய காதல் விடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், மிகவும் பக்குவப்பட்ட காதலர்களுக்கிடையே எழும் குழந்தைத்தனங்கள் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடரில் கூட இப்படிப்பட்ட காட்சிகளை இவர்களுக்கு வைக்கவில்லையே? இதல்லவா காட்சி. என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com