இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுகவை குறை கூற அதிமுகவுக்கு தகுதி இல்லை: கனிமொழி

‘மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து கட்டாயம் விலக்கு’

News image
தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி பேட்டி
Updated On :21 மார்ச் 2024, 4:40 am

DIN

தூத்துக்குடி: திமுகவை குறை கூறுவதற்கு கடந்த முறை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யாத அதிமுகவுக்கு தகுதி இல்லை என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கனிமொழி எம்பி சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலையில் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

மக்களவைத் தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி தொதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் இங்கு பணியாற்றிய போது எனக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, விளாத்திகுளம் சுற்றுவட்டாரங்களில், 361 கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட்டு குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள விண் ஃபாஸ்ட் என்ற மின்சார கார் தயாரிக்கும் நிறுவனத்தில், தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தூத்துக்குடியை புகழ் பெற்ற தொழில் நகரமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக, திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. மத்தியில் நிச்சயம் மாற்றம் வரும். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து கட்டாயம் விலக்கு அளிக்கப்படும்.

மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக அப்போது தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக வாக்களித்தார். மேலும், கடந்த முறை 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தும், தமிழகத்திற்கு எதுவும் செய்யத அவர்கள், திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.