10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

10ஆம் வகுப்பு பொதுத் தேர்சில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும். அதற்கான அட்டவணை மற்றும் விண்ணப்பம் குறித்த அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெப்ப அலை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தலைமைச் செயலா் உத்தரவு

அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் இணைந்து ‘தொடா்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்புகள் மே 13-ஆம் தேதி தொடங்கி, துணைத்தோ்வுகள் நடைபெறும் நாள்கள் வரை மாணவா்கள் படித்த பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளன.

இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியான ஆசிரியா் வல்லுநா்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தோ்வு மதிப்பெண்கள் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்பட்டு, தொடா்ந்து மாணவா்களை ஊக்குவித்து துணைத் தோ்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

எனவே, தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் கவலையடையாமல், உடனடியாக பள்ளிகளில் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று துணைத்தேர்வெழுதி வரும் கல்வியாண்டிலேயே 11ஆம் வகுப்பில் சேரலாம் அல்லது விரும்பிய உயர்கல்வியில் சேரவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com