மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்துக்கு இன்று ஒருநாள் விடுமுறை: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர்ந்து பெய்து வந்த மழை, தமிழகத்துக்கு இன்று ஒருநாள் விடுமுறை விட்டிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல்.

News image
மழை இல்லாத நாள்- Center-Center-Madurai
Updated On :9 நவம்பர் 2024, 6:52 am

DIN

சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாகவே அவ்வப்போது லேசான மழை என்று தொடங்கி பலத்த மழை பெய்து வந்த நிலையில், இன்று தமிழகத்துக்கு ஒரு நாள் மழை விடுமுறை விட்டிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெள்ளியன்று, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.

சனிக்கிழமை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களும், டெல்டா பகுதியும் நல்ல மழையைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழகத்தில் டெல்டா மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று மழை ஒரு நாள் விடுமுறை அளித்திருக்கிறது.

அதேவேளையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை விட்டு விட்டுப் பெய்யும் நிலையே இன்றும் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.