மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார்.
உசிலம்பட்டி அருகே ஆர்.பி.உதயகுமாருடன் சென்ற வாகனங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த தாக்குதலில் அதிமுக நிர்வாகிகள் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இபிஎஸ்ஸின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த சம்பவத்தில் அமமுகவினர் 6 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாகனங்களை மறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அதிமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!

மதுரையில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சம்மதம் இல்லாமல் கருப்பை அகற்றம்! பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்!

ஆட்சியில் பங்கு ஒத்து வராது; காங்கிரஸிடம் நேரடியாகவே முதல்வர் சொல்லி இருக்கலாம்: செல்லூர் ராஜு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

