துபையிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் கோவையில் தரையிறக்கம்!

துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் அவசர கதியில் தரையிறக்கப்பட்டது.

Updated On :

கோவை: துபையிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோவையில் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது.

துபையிலிருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஃப்ளை துபாய் விமானம், மோசமான வானிலையில் தரையிறங்க முடியாத நிலையில் ஏற்பட்டது.

வானிலை சீராகும் என்று அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம், பிறகு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஏற்கனவே வெள்ளிக்கிழமை இரவு, திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு அந்த விமானம் 2 மணி நேரம் வானில் வட்டமடித்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது விமானப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.