2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
இன்று எந்தெந்த மாவட்டங்களில மிக கனமழை பெய்யும் என்று தெரிந்துகொள்ளலாம்..


தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகின்றது.
இந்த நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று(அக். 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மினனலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(அக்.20) தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
சென்னையை பொருத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்கள்..
இன்றும், நாளையும் அந்தமான கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை
கலசபாக்கம் 17, அறந்தாங்கி 10, உசிலம்பட்டி 9, அவலூர்பேட்டை, பேராவூரணி தலா 8 செ.மீ மழையும் பெய்யுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...