மழையை எதிர்கொள்வதில் அரசு தோல்வி: ஆர்.பி. உதயகுமார்
இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளிப்பதாகவும், வீட்டில் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதியுற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.


மழையை எதிர்கொள்வதில் அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாக முன்னள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளிப்பதாகவும், வீட்டில் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதியுற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.
மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் செல்லூர், கட்டபொம்மன் நகர், நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர், குடியிருப்பில் வந்ததால் மக்கள் கடுமையான அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மதுரை வைகை ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசியபோது ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலங்களில் வடகிழக்கு பருவமழை மூன்று மாதம் பெய்யும், இந்த வடகிழக்கு பருவமழை போதுமான மழைப் பொழிவு நமக்கு கிடைக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயல் சின்னமாக இது போன்ற காலங்களில் உருவாகும். நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதில், இதை நாம் மூன்று கட்டங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளம் வரும் முன், வெள்ளம் சூழ்ந்த போதும், வெள்ளம் வடிந்த பின்பு என்று பிரிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு மதுரையில் இரண்டு நாள் மழைக்கே வடிகால் பகுதிக்களுக்கு தண்ணீர் செல்லாமல் வீட்டில் புகுந்துள்ளது.
தற்போது கூட வைகையாற்றில் நீர் வருகிறது. ஆனால், இங்கு இரண்டு பேர்தான் காவலில் உள்ளனர். இந்த பகுதியில் ஆபத்தான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இன்றைக்கு மழை நீர் வீட்டில் புகுந்து மதுரையே தத்தளிக்கிறது.
வைகையில் சாக்கடை நீர்
இரண்டு நாள்களில் மழை வெள்ளம் சரியாகிவிடும் என்று அமைச்சர்கள் கூறுகிறார்; இரண்டு நாள் மக்களுக்கு சோறு, தண்ணீர், மருந்து, ஆகியவற்றை யார் கொடுப்பார்கள்?
சாலையில் மழைநீருடன் சாக்கடையை கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதே மதுரை வைகை ஆற்றில் அதிகளவில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே இரண்டு நாளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை ஆலங்குளத்தில் நான் சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு ஆயத்தமாக உள்ளோம் என்று கூறினார்கள்; ஆனால் எந்த ஆயுத்த பணியும் நிறைவேறவில்லை.
தாழ்வான பகுதி உள்ள மக்களுக்கு நிவாரண முகாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனரா? அவர்களுக்கு உணவு, குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்கி விட்டார்களா?
அதேபோல், இதுபோன்ற காலங்களில் பணியாளர் குழுக்களை அமைக்க வேண்டும் அந்த விவரம் கூட அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.
இது போன்ற பேரிடர் காலங்களில் எந்த மாவட்டத்தில் இருந்து துப்புரவு பணியாளர்கள், தேசிய பேரிடர் படை, மாநில பேரிடர் படை,தீயணைப்பு படையினர் ஆகியோர் வந்துள்ளார்களா என்ற விவரம் தெரியவில்லை, மொத்தத்தில் இந்த அரசு மழை எதிர்கொள்வதில் முற்றிலும்தோல்வி அடைந்து விட்டது.
முதல்வரும் துணை முதல்வரும் அமைச்சரிடத்திலும் அதிகாரத்தில் பேசுகிறார்கள்; ஆனால் செயலில் தோல்வியை தான் காட்டுகிறது மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை.
கூடுதல் மழை பெய்து விட்டது என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள், இது போன்ற காலங்களில் கன மழை அதிகமாக இருக்க தான் செய்யும், ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு தேவையான அறிவிப்பை கொடுக்க வேண்டும். தற்போது மேற்கு வங்காளத்தில் புயல் கரையை கடந்த போது எந்த உயிர் இழப்பு இல்லை.
கஜா புயலில்...
இது போன்ற காலங்களில் கஜா புயல் ஏற்பட்டபோது எடப்பாடியார் நாகப்பட்டினத்தில் ஒரு லட்சம் குடும்பங்களை பத்திரமாக மீட்டு, நிவாரணமுகாமில் தங்க வைத்தார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் சிறுபாலங்களை தூர்வாரினார். அதேபோல் தமிழகத்தில் உள்ள 4,350 தாழ்வான இடங்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாமகல் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.
இன்றைக்கு கால்வாய் தூர்வாரப் படவில்லை என்று அமைச்சர், அதிகாரிகள் மீது பழிசுமத்துவது போன்ற அவல நிலையை நான் பார்த்ததில்லை. மெத்தன போக்கைகாட்டி அரசு காட்டி வருகிறது.
என்று தெரியவில்லை மாவட்டம் வாரியாக, தாலுகா வாரியாக எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதை 1993 ஆம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. வைகை ஆற்றில் ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றது. அப்போது ஜெயலலிதா உடனடியாக வந்து போர்க்கால் நடவடிக்கை எடுத்து மக்களைக் காத்தார் என உதயக்குமார் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...