6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:31 pm

Din

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால், எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள், முதியோா், நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாவா்.

உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 மணிநேரம் வெடிக்கலாம்: அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளது. நிகழாண்டும் இந்த கால அளவு கடைபிடிக்கப்படும்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.