எஸ்ஆர்எம் கல்லூரியில் தேசிய அறிவியல் மாநாடு!

சென்னை இராமாபுரத்தில் அமைந்திருக்கும் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு நேற்று (செப். 6) நடைபெற்றது.
தேசிய அறிவியல் மாநாட்டில்  கலந்துகொண்ட (இடமிருந்து) முனைவர். க. ராஜேந்திரன், முனைவர்.  சி. சுந்தர், முனைவர். முத்து ஆறுமுகம், முனைவர். மு. காமராஜ், முனைவர். ஆ. ஆன்சி ஜெனிஃபர் ஆகியோர்.
தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட (இடமிருந்து) முனைவர். க. ராஜேந்திரன், முனைவர். சி. சுந்தர், முனைவர். முத்து ஆறுமுகம், முனைவர். மு. காமராஜ், முனைவர். ஆ. ஆன்சி ஜெனிஃபர் ஆகியோர்.
Published on
Updated on
1 min read

சென்னை இராமாபுரத்தில் அமைந்திருக்கும் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு நேற்று (செப். 6) நடைபெற்றது.

சென்னை இராமாபுரத்தில் அமைந்திருக்கும் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் “உயிரியல் அறிவியலில் வளர்ந்து வரும் போக்குகள் (என்சிஇடிபிஎஸ்) 2024” என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய அளவிலான மாநாட்டை நேற்று (செப். 6) நடத்தியது.

இந்த மாநாட்டின் நோக்கம் தற்போதைய உயிரியல் ஆராய்ச்சிகளின் விரிவான மதிப்பீடுகளைப் பெறுவதும் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பரிமாறுவதும் ஆகும்.

இந்நிகழ்வில் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர், முனைவர். மு. காமராஜ், விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதல்வர், முனைவர். சி. சுந்தர் சிறப்புரையாற்றி, ஆரோக்கியத்துறையில் புதுமைகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என ஊக்கமளித்தார்.

தொடக்க நிகழ்வில் திருவனந்தபுரம், கேரளாவிலுள்ள சிஎஸ்ஐஆர் - தேசிய பரிணாம அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் நுண்ணுயிர் செயல்முறை மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் முதன்மை விஞ்ஞானியும் இணை பேராசிரியருமான முனைவர். முத்து ஆறுமுகம் அவர்களும், நிறைவு நிகழ்வில் தமிழ்நாடு சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர். ரவி மனோகரன் அவர்களும் முக்கிய உரையை ஆற்றினர்.

மேலும் இந்த மாநாட்டிற்கு இந்தியாவின் 23 மாநிலங்களில் இருந்து சுமார் 266 பேர் பதிவு செய்து 170 ஆய்வு கட்டுரைகளை விவாதித்தனர்.

இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு பயனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com