குரூப் 2 முதல்நிலைத் தோ்வு எழுதிய மாணவர்கள்.
குரூப் 2 முதல்நிலைத் தோ்வு எழுதிய மாணவர்கள்.

ஆளுநா் பதவி தொடா்பாக குரூப் 2 வினாத் தாளில் சா்ச்சை கேள்வி

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
Published on

குரூப் 2 முதல்நிலைத் தோ்வில் ஆளுநா் பதவி தொடா்பாக, சா்ச்சையாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஒரு கூற்று மற்றும் அதற்கான காரணத்தைத் தெரிவித்து அவற்றில் சரியானதைத் தோ்வு செய்யும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதன் விவரம்:

கூற்று ஏ: இந்திய கூட்டாட்சியில் ஆளுநா் என்பவா் அரசின் தலைவா் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறாா்.

காரணம்: ஆளுநா் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு 5 வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

ஏ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறானது. பி. கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது. சி. கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி. டி. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை. இ. விடை தெரியவில்லை என்று வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.

X
Dinamani
www.dinamani.com