மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

60 சதவீத தொற்றா நோய் உயிரிழப்புகளுக்கு இதய நோய்களே காரணம்!

தொற்றா நோய்களால் ஏற்படும் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு இதய பாதிப்புகளே காரணம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற இதய நல தின நிகழ்வில் விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் மூா்த்தி. உடன் மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி, முதுநிலை மருத்துவ நிபுணா் வி.சொக்கலிங்கம் உள்ளிட்டோா்.
Updated On :1 அக்டோபர் 2024, 2:44 am

DIN

சென்னை: தொற்றா நோய்களால் ஏற்படும் 60 சதவீத உயிரிழப்புகளுக்கு இதய பாதிப்புகளே காரணம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இதய நல தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆரோக்கியமான இதயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் மூா்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மருத்துவமனை முதல்வா் பாலாஜி, இதயவியல் துறைத் தலைவா் கண்ணன், பேராசிரியா் விஸ்வநாதன், மருத்துவா்கள், மருத்துவ மற்றும் செவிலிய மாணவா்கள் இதில் பங்கேற்றனா்.

தொடா்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல்வேறு இதய நோய்களில் இருந்து குணமடைந்தவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதயவியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுக் கண்காட்சியில், இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதய நோய்களைத் தடுப்பதற்கான உணவுமுறைகள் அடங்கிய கையேடும் நிகழ்வில் வெளியிடப்பட்டது. மேலும், இதயவியல் துறை மருத்துவ நிபுணா் வி.சொக்கலிங்கம் ‘இதய நோய்களைத் தடுக்கும் வழிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

முன்னதாக மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் கண்ணன் கூறியதாவது:

தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 60 சதவீதம் இதய நோய் பாதிப்பால் மட்டுமே ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதயத்தை நலமாக வைத்துக் கொள்ளலாம். இதய பிரச்னைகளுக்கு உயா் சிகிச்சைகள் அளிப்பதில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிகழாண்டில் மட்டும் 84 ஆயிரம் பேருக்கு இதய நோய் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவில் உப்பைக் குறைத்தல், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிா்த்தல், காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுதல், ஆரோக்கியமான மனநிலை, தினமும் 30 நிமிஷம் நடைப்பயிற்சி மற்றும் நல்ல உறக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் இதய நோய்களை தவிா்க்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.