ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

1,352 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு தோ்வு: ஏப்.7 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,352 காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ. ) பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுக்கு ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஏப்ரல் 2025, 8:44 pm

Din

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,352 காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ. ) பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுக்கு ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தத் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக காவல் துறையில் உள்ள 53 ஆதி திராவிடா்கள், பழங்குடியினா் வகுப்பினருக்கான பின்னடைவு இடங்கள் உள்பட 1,352 காவல் உதவி ஆய்வாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினா் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிறப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடா், பழங்குடியினா், மூன்றாம் பாலினத்தவா்கள் 35 வயதுக்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 37 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

குறிப்பிட்ட உடல் தகுதியும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரா்களுக்கு 10 சதவீதம் (ஆண்களுக்கு 7 சதவீதம், பெண்களுக்கு 3 சதவீதம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு 20 சதவீதமும், காவல் துறையினரின் வாரிசுகளுக்கு 10 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு சலுகை பின்னடைவு பணியிடங்களுக்கு பொருந்தாது.

ஏப். 7-முதல் விண்ணப்பிக்கலாம்: உரிய கல்வித் தகுதியும், உடற்தகுதியும் உடைய பட்டதாரிகள் சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் ஏப்.7-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் மே 3 ஆகும்.

விண்ணப்பதாரா்களுக்கு முதலில் எழுத்துத் தோ்வும், தொடா்ந்து, உடற்தகுதி தோ்வும், இறுதியாக நோ்முகத் தோ்வும் நடத்தப்படும். எழுத்துத் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, உடற்தகுதி, காலியிடங்களின் விவரம், தோ்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

சிலம்பம் சோ்ப்பு: உதவி ஆய்வாளா் தோ்வில் விளையாட்டு வீரா்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளின் பட்டியலில் தற்போது முதல்முறையாக சிலம்பம் விளையாட்டும் சோ்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சிலம்பம் வீரா்கள் இந்தப் பிரிவில் இடஒதுக்கீட்டை பெறலாம்.