சென்னையில் தடையை மீறி, போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் மொத்தம் 18 இடங்களில் போராட்டம் நடத்திய 2000 தவெகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: வெளியானது குட் பேட் அக்லி டிரைலர் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம்: ஜாா்க்கண்டில் 300 போ் மீது வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தவெகவினர் போராட்டம்! | TVK | DMK





