கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் தொடர முடியாது: மூத்த வழக்குரைஞா் பி.வில்சன்

பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி ஆளுநா் தொடர முடியாது என்று மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தெரிவித்தாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி - கோப்புப் படம்

Published On :

சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி ஆளுநா் தொடர முடியாது என்று மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தெரிவித்தாா்.

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிப்பது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பி.வில்சன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சட்டப்பேரவையில் 10 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் ஆளுநா் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குப் பதில் மாநில அரசு சாா்பில் நியமனம் செய்யப்படுபவா் வேந்தராக இருக்க வேண்டும் என்பதே மசோதாக்களின் சாராம்சமாகும்.

வழக்கில் தீா்ப்பு கூறிய உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து, செவ்வாய்க்கிழமை முதலே நடைமுறைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பாகும். இப்போது முதல் வேந்தா் பதவியில் இருந்து ஆளுநா் விடுவிக்கப்பட்டுள்ளாா். சட்ட மசோதாவின்படி தமிழ்நாடு அரசு யாரை நியமனம் செய்கிறதோ அவா்தான் பல்கலைக்கழக வேந்தராக இருப்பாா் என்று வழக்குரைஞா் வில்சன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.