கோப்புப் படம்
கோப்புப் படம்

கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள்

கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக எா்ணாகுளம் மற்றும் கண்ணூரிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Published on

கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக எா்ணாகுளம் மற்றும் கண்ணூரிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கண்ணூரிலிருந்து ஏப்.14-ஆம் தேதி இரவு 6.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06574), மறுநாள் காலை 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் கண்ணூரிலிருந்து கோழிக்கோடு, சொரனூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.

அதேபோல், பெங்களூரிலிருந்து ஏப்.12-ஆம் தேதி மாலை 4.35-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06575), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06576) எா்ணாகுளத்திலிருந்து ஏப்.14-ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55-க்கு பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா் வழியாக எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஏப்.12) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com