பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக....

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்(கோப்புப்படம்)

Published On :

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.

இவ்வழக்கின் விசாரணையை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.