மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2025, 7:44 am

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளார் அல்லி, வரும் மே 1 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறையை அறிவித்துள்ளார்.

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், குடும்ப நல நீதிமன்ற அலுவலங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.