ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவை கூட்டம் பற்றி....
Tamil Nadu cabinet meeting on Aug 14
தமிழக அமைச்சரவைக் கூட்டம் கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் அடுத்த கட்ட திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Tamil Nadu cabinet meeting will be held on August 14th under the chairmanship of Chief Minister M.K. Stalin in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com